• Dec 13 2024

இந்தோனிசீயாவில் நிலச்சரிவில் : காணாமல்போனோரைத் தேடும் பணி தொடர்கிறது

Tharmini / Nov 26th 2024, 10:19 am
image

இந்தோனீசியாவின் வட சுமத்திரா மாநிலத்தை அண்மையில் கனமழை உலுக்கியது.

இதன் காரணமாகத் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இதில் 15 பேர் மாண்டனர்.

இந்நிலையில், பேரிடர் நிகழ்ந்து நான்கு நாள்கள் கழித்து, மாயமான 7 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.

இத்தகவலை இந்தோனீசிய அதிகாரி ஒருவர் நவம்பர் 26ஆம் தேதியன்று தெரிவித்தார்.

தேடுதல், மீட்புப் பணியில் ஏறத்தாழ நூறு பேருடன் காவல்துறை அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இடைவிடா மழை தேடுதல் பணிக்கு இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“தேடுதல் பணி நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.

நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் காரணமாக வீடுகள், பள்ளிவாசல்கள், நெல் வயல்கள் ஆகியவை சேதமடைந்தன.

கிராமங்களுக்கு இட்டுச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

மாயமானோரைத் தேடும் பணியில் மண்ணைத் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன,

இதற்கிடையே, கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாள்களிலும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வடசுமத்திரா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனிசீயாவில் நிலச்சரிவில் : காணாமல்போனோரைத் தேடும் பணி தொடர்கிறது இந்தோனீசியாவின் வட சுமத்திரா மாநிலத்தை அண்மையில் கனமழை உலுக்கியது.இதன் காரணமாகத் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இதில் 15 பேர் மாண்டனர்.இந்நிலையில், பேரிடர் நிகழ்ந்து நான்கு நாள்கள் கழித்து, மாயமான 7 பேரைத் தேடும் பணி தொடர்கிறது.இத்தகவலை இந்தோனீசிய அதிகாரி ஒருவர் நவம்பர் 26ஆம் தேதியன்று தெரிவித்தார்.தேடுதல், மீட்புப் பணியில் ஏறத்தாழ நூறு பேருடன் காவல்துறை அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும், இடைவிடா மழை தேடுதல் பணிக்கு இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.“தேடுதல் பணி நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறினர்.நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் காரணமாக வீடுகள், பள்ளிவாசல்கள், நெல் வயல்கள் ஆகியவை சேதமடைந்தன.கிராமங்களுக்கு இட்டுச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டன.மாயமானோரைத் தேடும் பணியில் மண்ணைத் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன,இதற்கிடையே, கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாள்களிலும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வடசுமத்திரா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement