• Oct 06 2026

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரமுனையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் நூல் வெளியீடு

dorin / Oct 5th 2026, 2:06 pm
image

2000வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக்கொண்ட அம்;பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வுசெய்யப்பட்டு எழுதப்பட்;ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்”என்னும் நூல்  வெளியிட்டுவைக்கப்பட்டது.

கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய இந்த வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தகம் வைக்கப்பட்டு விசேட பூஜை நடாத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.

விழாக்குழுவின் தலைவரும், ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் செயலாளருமான அ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்,லகுகல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் நவநீதன்,போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கமல்ராஜ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் உட்பட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலம் தொடர்பான வரலாறு, பண்பாட்டு மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய நூலாகவும் வீரமுனையின் நீண்ட வரலாற்றினை மிக ஆழமாக ஆய்வுசெய்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, நூல் வெளியீட்டுரையும் அறிமுக உரையும், நூல் வெளியீடு, நூல் நயவுரை, ஏற்புரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் நூலாசிரியர் சுகவீனம் காரணமாக வரமுடியாத நிலையில் அவரது பாரியார் வீரமுனை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது வீரமுனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமய மற்றும் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரமுனையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் நூல் வெளியீடு 2000வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக்கொண்ட அம்;பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வுசெய்யப்பட்டு எழுதப்பட்;ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்”என்னும் நூல்  வெளியிட்டுவைக்கப்பட்டது.கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய இந்த வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது.முன்னதாக ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தகம் வைக்கப்பட்டு விசேட பூஜை நடாத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.விழாக்குழுவின் தலைவரும், ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் செயலாளருமான அ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன்,லகுகல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் நவநீதன்,போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கமல்ராஜ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் உட்பட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலம் தொடர்பான வரலாறு, பண்பாட்டு மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய நூலாகவும் வீரமுனையின் நீண்ட வரலாற்றினை மிக ஆழமாக ஆய்வுசெய்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, நூல் வெளியீட்டுரையும் அறிமுக உரையும், நூல் வெளியீடு, நூல் நயவுரை, ஏற்புரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த நிகழ்வில் நூலாசிரியர் சுகவீனம் காரணமாக வரமுடியாத நிலையில் அவரது பாரியார் வீரமுனை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.இதன்போது வீரமுனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.இந்நூல் வெளியீட்டு விழாவில் வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமய மற்றும் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement