• May 05 2024

தமிழை உயர்நீதிமன்ற மொழி ஆக்கக் கோரி சென்னையில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலைப் போராட்டம்...! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவு!

Sharmi / Mar 5th 2024, 8:34 am
image

Advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்காடும் மொழியாக தமிழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதற்கு மத்திய - மாநில அரசுகள், உடனே ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று,சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழை உயர்நீதிமன்ற மொழி ஆக்கக் கோரி சென்னையில் வழக்கறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் கடந்த 28 ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் கவலையளிக்கக் கூடியதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பிய கோப்பில் குடியரசுத் தலைவர் ஒப்பமிட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மொழியுரிமைக்கும் நீதிக்குமான இந்தப் போராட்டத்துக்குத் தமிழக அரசு துணைநிற்க வேண்டுகிறோம்.  

உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கும் ஏனைய தமிழ் உணர்வாளர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்   தன் தோழமை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தப் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு திலீபனின் ஈகத்தை நினைவூட்டுவதாக உள்ளது.

வழக்கறிஞர்களின் இந்த உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க புவிப் பரப்பெங்கும் பரந்து வாழும் தமிழர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  அறைகூவி அழைக்கிறது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழை உயர்நீதிமன்ற மொழி ஆக்கக் கோரி சென்னையில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலைப் போராட்டம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆதரவு சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்காடும் மொழியாக தமிழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதற்கு மத்திய - மாநில அரசுகள், உடனே ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று,சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,தமிழை உயர்நீதிமன்ற மொழி ஆக்கக் கோரி சென்னையில் வழக்கறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் கடந்த 28 ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் கவலையளிக்கக் கூடியதாகும்.இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பிய கோப்பில் குடியரசுத் தலைவர் ஒப்பமிட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் நியாயமான கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது. மொழியுரிமைக்கும் நீதிக்குமான இந்தப் போராட்டத்துக்குத் தமிழக அரசு துணைநிற்க வேண்டுகிறோம்.  உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கும் ஏனைய தமிழ் உணர்வாளர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்   தன் தோழமை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு திலீபனின் ஈகத்தை நினைவூட்டுவதாக உள்ளது.வழக்கறிஞர்களின் இந்த உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க புவிப் பரப்பெங்கும் பரந்து வாழும் தமிழர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  அறைகூவி அழைக்கிறது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement