அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீனின் தந்தை முஹம்மது பதியுதீனின் ஜனாஸாவை பார்வையிடுவதற்காக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) புத்தளம் , அல்மினாபுரம் வீட்டுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்களை சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், ஜனாஸாவை பார்வையிடுவதற்காக வருகை தந்த மக்களுடனும் எதிர்க் கட்சித் தலைவர் சிநேகபூர்வதாக கலந்துரையாடினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் குறித்த ஜனாஸாவை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர்.
சில மாதங்களாக சுகயீனமடைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் தந்தையான முஹம்மது பதியுதீன் தனது 78 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (17) இரவு காலமானார்.
அன்னாரது ஜனாஸா இன்று (18) மாலை புத்தளம், ரத்மல்யாய - அல்காசிமி சிட்டி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாத் எம்.பியின் தந்தையின் ஜனாஸாவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் இறுதி அஞ்சலி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீனின் தந்தை முஹம்மது பதியுதீனின் ஜனாஸாவை பார்வையிடுவதற்காக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) புத்தளம் , அல்மினாபுரம் வீட்டுக்கு விஜயம் செய்தார்.இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்களை சந்தித்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.மேலும், ஜனாஸாவை பார்வையிடுவதற்காக வருகை தந்த மக்களுடனும் எதிர்க் கட்சித் தலைவர் சிநேகபூர்வதாக கலந்துரையாடினார்.இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் குறித்த ஜனாஸாவை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர்.சில மாதங்களாக சுகயீனமடைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் தந்தையான முஹம்மது பதியுதீன் தனது 78 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (17) இரவு காலமானார்.அன்னாரது ஜனாஸா இன்று (18) மாலை புத்தளம், ரத்மல்யாய - அல்காசிமி சிட்டி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.