• Nov 23 2024

அனைத்து தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் இன்று முதல் இரத்து..!

Chithra / Oct 23rd 2024, 8:39 am
image


அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக  தபால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இதேவேளை  பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க  தெரிவித்துள்ளது. 

நவம்பர் மாதம் 14 ஆம் திகதி  பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் இன்று முதல் இரத்து. அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டதாக  தபால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை  பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க  தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதி  பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 31, நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement