திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில், பயணிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவிடலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அதிக கட்டணம் வசூலிக்கும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்துகள் தொடர்பாக ஆணைக்குழுவின் 1955என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 25 95 555 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மற்றும் மாகாண பேருந்து சேவை வழங்குநர்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மாகாண அதிகார சபைக்கு 1958 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4.24% திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில், பயணிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவிடலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அதிக கட்டணம் வசூலிக்கும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்துகள் தொடர்பாக ஆணைக்குழுவின் 1955என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 25 95 555 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மற்றும் மாகாண பேருந்து சேவை வழங்குநர்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட மாகாண அதிகார சபைக்கு 1958 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.நேற்றிரவு(01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4.24% திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.