• Feb 14 2026

வாக்குறுதியளித்த நிவாரணங்களை வழங்கத் தவறினால்,சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சஜித் பிரேமதாச!

dileesiya / Dec 30th 2025, 4:29 pm
image

டித்வா சூறாவளி ஏற்பட்ட காலத்திலும் அதனைத் தொடர்ந்து காலப்பகுதியிலும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதாக அரசாங்கமும் ஜனாதிபதியும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். எனினும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அதற்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு தகரத் துண்டு கூட சேதமடைந்தால் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அவற்றில் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 

இது மிகப் பாரதூரமான நிலைமை என்றும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்புகளை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியின்  மூச்சு திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, அநுராதபுரம் மாவட்டம் ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு பயணம் செய்யும் போது தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் மற்றும் விவசாய சமூகத்தினருடன் நடத்திய கலந்துரையாடல்களில், அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அரசாங்கம் ஊடகங்கள் மூலம் அறிவித்த செய்திகள் நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்ததாக சஜித் பிரேமதாச கூறினார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

அறிவிக்கப்பட்ட நிவாரணங்களை மக்களுக்கு வழங்கத் தவறினால், மக்கள் சார்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்ற உரைகள் மற்றும் பொது மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் வரை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிவாரணங்கள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் என்பதால், அவை முழுமையாக கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்றும், நிவாரணத் தொகைகளை எந்த விதத்திலும் குறைக்காமல், அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வாக்குறுதியளித்த நிவாரணங்களை வழங்கத் தவறினால்,சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சஜித் பிரேமதாச டித்வா சூறாவளி ஏற்பட்ட காலத்திலும் அதனைத் தொடர்ந்து காலப்பகுதியிலும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதாக அரசாங்கமும் ஜனாதிபதியும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். எனினும், அவ்வாறு அறிவிக்கப்பட்ட சலுகைகள், நிவாரணங்கள், அதற்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஒரு தகரத் துண்டு கூட சேதமடைந்தால் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அவற்றில் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இது மிகப் பாரதூரமான நிலைமை என்றும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.டித்வா சூறாவளியால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்புகளை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியின்  மூச்சு திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, அநுராதபுரம் மாவட்டம் ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு பயணம் செய்யும் போது தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் மற்றும் விவசாய சமூகத்தினருடன் நடத்திய கலந்துரையாடல்களில், அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அரசாங்கம் ஊடகங்கள் மூலம் அறிவித்த செய்திகள் நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்ததாக சஜித் பிரேமதாச கூறினார்.நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.அறிவிக்கப்பட்ட நிவாரணங்களை மக்களுக்கு வழங்கத் தவறினால், மக்கள் சார்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்ற உரைகள் மற்றும் பொது மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் வரை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இந்த நிவாரணங்கள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் என்பதால், அவை முழுமையாக கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்றும், நிவாரணத் தொகைகளை எந்த விதத்திலும் குறைக்காமல், அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement