• Apr 02 2025

தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை தாக்கிய சிறுத்தை

Chithra / Dec 5th 2024, 3:51 pm
image


சிறுத்தை தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று மதியம் பொகவந்தலாவ - தெரேசியா தோட்ட மோரா பிரிவில் இடம்பெற்றுள்ளது.

55 வயதுடைய மாரியாய் என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த பெண், தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையிலேயே சிறுத்தை தாக்கியுள்ளது.

இதையடுத்து, பெண், தோட்ட வாகனம் மூலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண்ணை தாக்கிய சிறுத்தை சிறுத்தை தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று மதியம் பொகவந்தலாவ - தெரேசியா தோட்ட மோரா பிரிவில் இடம்பெற்றுள்ளது.55 வயதுடைய மாரியாய் என்ற பெண்ணே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.குறித்த பெண், தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையிலேயே சிறுத்தை தாக்கியுள்ளது.இதையடுத்து, பெண், தோட்ட வாகனம் மூலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement