• Jan 26 2025

புஸ்ஸலாவ உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

Chithra / Jan 17th 2025, 3:23 pm
image

 

புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக நயப்பனை தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் நேற்று காலை இந்த சிறுத்தை விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.

தற்போது வீடுகளுக்கு அருகில் இந்த சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தையின் உடல் கம்பளையில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புஸ்ஸலாவ உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு  புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.மிக நீண்ட காலமாக நயப்பனை தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் நேற்று காலை இந்த சிறுத்தை விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.தற்போது வீடுகளுக்கு அருகில் இந்த சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த சிறுத்தையின் உடல் கம்பளையில் உள்ள வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement