கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டம் வெள்ளிக்கிழமை (21) ஆலங்குடா மரவன்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பொது சமூக சேவைகள் அமைப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் “போதையை ஒழிப்போம், கல்வியை வளர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் “ஜாதி, மதம், மொழி, கட்சி பேதங்களை மறப்போம், போதையை ஒழிப்போம்”, “கல்வியை வளர்ப்போம், சமாதானத்தை கட்டியெழுப்புவோம்”, “போதை இல்லா நாளை இன்றே தொடங்குவோம்”, “போதையை எதிர்ப்போம், எமது தலைமுறையை காப்போம்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் அமைதியான முறையில் விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.
போதைப்பொருள் பாவனை சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் இதனால் பாதிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தையும் பாதுகாப்புத் தரப்பினரையும் மட்டும் குறைகூறுவதால் பயனில்லை எனவும், நாட்டில் போதைப்பொருள் பாவனையை முழுமையாக கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஒவ்வொரு கிராமத்திலும் வாழும் மக்கள் போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுத்து, அதனை ஒழிக்கும் முயற்சிகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன் முதற்கட்டமாக ஆலங்குடா கிராமத்தில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
“போதை இல்லா நாளை இன்றே தொடங்குவோம்” – ஆலங்குடாவில் விழிப்புணர்வு கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு போராட்டம் வெள்ளிக்கிழமை (21) ஆலங்குடா மரவன்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.புத்தளம் மாவட்ட பொது சமூக சேவைகள் அமைப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் “போதையை ஒழிப்போம், கல்வியை வளர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.போராட்டத்தில் “ஜாதி, மதம், மொழி, கட்சி பேதங்களை மறப்போம், போதையை ஒழிப்போம்”, “கல்வியை வளர்ப்போம், சமாதானத்தை கட்டியெழுப்புவோம்”, “போதை இல்லா நாளை இன்றே தொடங்குவோம்”, “போதையை எதிர்ப்போம், எமது தலைமுறையை காப்போம்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் அமைதியான முறையில் விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.போதைப்பொருள் பாவனை சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் இதனால் பாதிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்தையும் பாதுகாப்புத் தரப்பினரையும் மட்டும் குறைகூறுவதால் பயனில்லை எனவும், நாட்டில் போதைப்பொருள் பாவனையை முழுமையாக கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.ஒவ்வொரு கிராமத்திலும் வாழும் மக்கள் போதைப்பொருளுக்கு எதிராக குரல் கொடுத்து, அதனை ஒழிக்கும் முயற்சிகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இதன் முதற்கட்டமாக ஆலங்குடா கிராமத்தில் இருந்து இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிட்டனர்.