• May 14 2026

உயிர்காப்பு அங்கி கட்டாயம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 48 மணிநேரம் அபாயம்

Chithra / May 13th 2026, 7:04 pm
image

நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவக்கூடும். இதனால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார்.


கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி கட்டாயம் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிந்திருக்க வேண்டும் என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.


குறிப்பாக, கடலுக்குப் புறப்படுவது முதல் மீண்டும் கரை திரும்பும் வரை முழுமையான காலப்பகுதியில் இதனைப் பின்பற்றுவது அவசியமாகும்.


நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.


புத்தளம், சிலாபம் முதல் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.


கடலோரப் பகுதிகளில் சிறு படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவோர் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும் அல்லது கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.


பலநாள் மீன்பிடிக் கலன்கள் வழமை போன்று துறைமுகங்களிலிருந்து வெளியேறவும் கரை திரும்பவும் முடியும். நிலவரப்படி கடற்றொழிலில் ஈடுபட முழுமையான தடை விதிக்கப்படவில்லை, ஆனால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மிக அவசியமானவையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் நாட்டின் வடகிழக்கு கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இலங்கையில் நிலவி வரும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தொகுதி அடுத்த 48 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு விலகிச் செல்லும் என்றும், படிப்படியாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இருப்பினும், இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயிர்காப்பு அங்கி கட்டாயம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை அடுத்த 48 மணிநேரம் அபாயம் நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவக்கூடும். இதனால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார்.கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி கட்டாயம் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிந்திருக்க வேண்டும் என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக, கடலுக்குப் புறப்படுவது முதல் மீண்டும் கரை திரும்பும் வரை முழுமையான காலப்பகுதியில் இதனைப் பின்பற்றுவது அவசியமாகும்.நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.புத்தளம், சிலாபம் முதல் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.கடலோரப் பகுதிகளில் சிறு படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவோர் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும் அல்லது கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.பலநாள் மீன்பிடிக் கலன்கள் வழமை போன்று துறைமுகங்களிலிருந்து வெளியேறவும் கரை திரும்பவும் முடியும். நிலவரப்படி கடற்றொழிலில் ஈடுபட முழுமையான தடை விதிக்கப்படவில்லை, ஆனால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மிக அவசியமானவையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நாட்டின் வடகிழக்கு கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இலங்கையில் நிலவி வரும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தொகுதி அடுத்த 48 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு விலகிச் செல்லும் என்றும், படிப்படியாக வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement