• May 19 2026

6 மாதங்களாக கூடாரம் தான் வாழ்க்கை - பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள்!

shanu / May 18th 2026, 11:45 am
image

கடந்த 6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றனர்.


இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலகல தோட்டம், 508/B கோணக்கலை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கூடாரங்களில் வாழும் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


15 குடும்பங்கள் தற்போது வாழும் கூடாரம் மற்றும் டித்வா பேரிடரின்போது அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் திகதி ஏற்பட்ட தித்வா புயலின் பின்னர் வீடுகளை இழந்து தவிக்கும் இம் மக்கள் தங்களது நாளாந்த கடமைகளை நிறைவேற்ற முடியாது உள்ளனர்.


குறிப்பாக கழிவறை வசதிகள் சுத்தமான குடிநீர் பிள்ளைகள் படிப்பதற்கு வசதி இல்லை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த ஆறு மாதங்களாக குடிசை மற்றும் கொட்டில் களில் தங்களது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல நிலையில் உள்ளனர்.


இவர்களுக்கு நிரந்தர இல்லங்கள் அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


6 மாதங்களாக கூடாரம் தான் வாழ்க்கை - பாதுகாப்பான இடம் கோரும் அலகல தோட்ட மக்கள் கடந்த 6 மாதங்களாகக் கூடாரங்களில் வாழ்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றோம். எனவே, பாதுகாப்பான இடத்தில் காணி வழங்கி, தற்காலிக வீடுகளையாவது விரைவில் அமைத்துத் தருமாறு கோருகின்றனர்.இவ்வாறு நுவரெலியா மாவட்டம், ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அலகல தோட்டம், 508/B கோணக்கலை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கூடாரங்களில் வாழும் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.15 குடும்பங்கள் தற்போது வாழும் கூடாரம் மற்றும் டித்வா பேரிடரின்போது அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் திகதி ஏற்பட்ட தித்வா புயலின் பின்னர் வீடுகளை இழந்து தவிக்கும் இம் மக்கள் தங்களது நாளாந்த கடமைகளை நிறைவேற்ற முடியாது உள்ளனர்.குறிப்பாக கழிவறை வசதிகள் சுத்தமான குடிநீர் பிள்ளைகள் படிப்பதற்கு வசதி இல்லை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த ஆறு மாதங்களாக குடிசை மற்றும் கொட்டில் களில் தங்களது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல நிலையில் உள்ளனர்.இவர்களுக்கு நிரந்தர இல்லங்கள் அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement