• Dec 03 2024

உயர்தரப் பரீட்சையின் பின்னரே உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு! தேர்தல் ஆணையம் முடிவு

Chithra / Dec 2nd 2024, 9:27 am
image

 

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டால், பரீட்சை காலத்தின் போது, வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள்.

எனவே, பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அது முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மோசமான காலநிலை காரணமாக, சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை நடவடிக்கைகள், இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீளப் பெறுவது தொடர்பிலும் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

உயர்தரப் பரீட்சையின் பின்னரே உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையம் முடிவு  2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பு தற்சமயம் வெளியிடப்பட்டால், பரீட்சை காலத்தின் போது, வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை தொடங்குவார்கள்.எனவே, பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அது முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.மோசமான காலநிலை காரணமாக, சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை நடவடிக்கைகள், இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது.இந்த கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுக்களை மீளப் பெறுவது தொடர்பிலும் இதன்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement