ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விரைவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
எனினும், போதியளவு நிதி இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை.
உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, இலங்கை மக்கள் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை உறுதிப்படுத்தும் செயற்பாட்டை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த விடயத்தில் அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
விரைவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விரைவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன.எனினும், போதியளவு நிதி இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை.உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, இலங்கை மக்கள் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை உறுதிப்படுத்தும் செயற்பாட்டை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த விடயத்தில் அரசியலமைப்பில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.