• Dec 02 2024

லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

Sharmi / Dec 2nd 2024, 1:24 pm
image

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பிணை கோரிக்கையை நுகேகொட பிரதான நீதவான் திருமதி ருவானி ஜயவர்தன மீண்டும் நிராகரித்துள்ளார்.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான திருமதி ஷஷி பிரபா ரத்வத்தவின் மிரிஹான அம்முதெனிய, சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுஇல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லொஹான் ரத்வத்த மற்றும் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில். சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் பிணை கோரிக்கையை நுகேகொட பிரதான நீதவான் திருமதி ருவானி ஜயவர்தன மீண்டும் நிராகரித்துள்ளார்.இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான திருமதி ஷஷி பிரபா ரத்வத்தவின் மிரிஹான அம்முதெனிய, சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுஇல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.இதனையடுத்து குறித்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement