• Apr 20 2026

நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது!

shanu / Dec 5th 2025, 11:22 pm
image


யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.


யாழ்ப்பாணம் நகர் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றை திருடியபோது கண்காணிப்பு கமெரா மூலம் அடையாளம் காணப்பட்டு குறித்த பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.


சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் 12 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டது.


சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.யாழ்ப்பாணம் நகர் பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்றை திருடியபோது கண்காணிப்பு கமெரா மூலம் அடையாளம் காணப்பட்டு குறித்த பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதுடன் 12 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement