• Sep 16 2026

சீமெந்து மூடைகளுடன் சென்ற லொறி விபத்து – உயிராபத்து தவிர்ப்பு

Chithra / Sep 16th 2026, 1:54 pm
image


அநுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் திருகோணமலை, மிஹிந்துபுர சந்திப் பகுதியில் இன்று (16) காலை சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்தில் லொறி பாரிய சேதங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


லொறியில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த சீமெந்து மூடைகள் வீதியில் சிதறிக் காணப்பட்டுள்ளன.


எனினும், இந்த விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


சீமெந்து மூடைகளுடன் சென்ற லொறி விபத்து – உயிராபத்து தவிர்ப்பு அநுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் திருகோணமலை, மிஹிந்துபுர சந்திப் பகுதியில் இன்று (16) காலை சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் லொறி பாரிய சேதங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லொறியில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த சீமெந்து மூடைகள் வீதியில் சிதறிக் காணப்பட்டுள்ளன.எனினும், இந்த விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement