• Nov 21 2024

பாதுகாப்பு தரப்பினரின் திடீர் பாய்ச்சலில் கோடிகளுடன் சிக்கிய லொறி....!samugammedia

Sharmi / Dec 8th 2023, 3:03 pm
image

சட்டவிரோதமாக லொறியொன்றில் கொண்டுசெல்லப்பட்ட 2600 கிலோ கிராம் பீடி இலைகள்  குருநாகல் - மாஸ்பொத பகுதியில் வைத்து இராணுவம் மற்றும் விஷேட அதிரடி படையினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் , சந்தேகத்தின் பெயரில் குறித்த லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின்படி இராணுவத்தினரும், விஷேட அதிரடிப் படையினரும் கூட்டாக இணைந்து இன்று அதிகாலை குறித்த பகுதியில் நடத்திய விஷட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத பீடி இலைகள் இந்தியாவிலிருந்து இலங்கையில் பல இடங்களுக்கும் விநியோகிக்கும் நோக்கில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

புத்தளம் - சிலாபம் பகுதியில் இருந்து மாவனல்லை நோக்கி லொறி ஒன்றில் கொண்டு சென்ற போது,   இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மஸ்பொத்த பிரதேசத்தில் வைத்து குறித்த லொறியை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த லொறியில் மிகவும் சூட்கமான முறையில்  உரைப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் ஒரு கோடியே முப்பத்து ஐந்து இலட்சம் (1,350,000) பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி கைப்பற்றப்பட்ட பீடி இலைகளல மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


பாதுகாப்பு தரப்பினரின் திடீர் பாய்ச்சலில் கோடிகளுடன் சிக்கிய லொறி.samugammedia சட்டவிரோதமாக லொறியொன்றில் கொண்டுசெல்லப்பட்ட 2600 கிலோ கிராம் பீடி இலைகள்  குருநாகல் - மாஸ்பொத பகுதியில் வைத்து இராணுவம் மற்றும் விஷேட அதிரடி படையினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் , சந்தேகத்தின் பெயரில் குறித்த லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின்படி இராணுவத்தினரும், விஷேட அதிரடிப் படையினரும் கூட்டாக இணைந்து இன்று அதிகாலை குறித்த பகுதியில் நடத்திய விஷட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த சட்டவிரோத பீடி இலைகள் இந்தியாவிலிருந்து இலங்கையில் பல இடங்களுக்கும் விநியோகிக்கும் நோக்கில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.புத்தளம் - சிலாபம் பகுதியில் இருந்து மாவனல்லை நோக்கி லொறி ஒன்றில் கொண்டு சென்ற போது,   இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மஸ்பொத்த பிரதேசத்தில் வைத்து குறித்த லொறியை பரிசோதனை செய்தனர்.இதன்போது, குறித்த லொறியில் மிகவும் சூட்கமான முறையில்  உரைப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் ஒரு கோடியே முப்பத்து ஐந்து இலட்சம் (1,350,000) பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி கைப்பற்றப்பட்ட பீடி இலைகளல மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement