• Apr 22 2026

மகாவலியின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

Chithra / Dec 18th 2025, 8:07 pm
image

 

அடுத்த 48 மணிநேரங்களில் மகாவலி கங்கைக் கரையோரமாக உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. 

 

மேலும், மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லும் பாதை, மற்றும் சோமாவதிய ரஜ மகா விகாரையை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. 

 

எனவே, சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள், அடுத்த சில நாட்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குச் செல்லாமல் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

 

மேலும், குறித்த பகுதிகளில் மகாவலி நதிக்கரையோரமாக வசித்து வரும் பொதுமக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள அபாயத்திலிருந்து தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். 

 

இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாவலியின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்  அடுத்த 48 மணிநேரங்களில் மகாவலி கங்கைக் கரையோரமாக உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.  மேலும், மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லும் பாதை, மற்றும் சோமாவதிய ரஜ மகா விகாரையை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.  எனவே, சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள், அடுத்த சில நாட்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குச் செல்லாமல் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.  மேலும், குறித்த பகுதிகளில் மகாவலி நதிக்கரையோரமாக வசித்து வரும் பொதுமக்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள அபாயத்திலிருந்து தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement