இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய காற்றுச் சுழற்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில், இலங்கைக்கு வடகிழக்காக சுமார் 1,000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த சக்திவாய்ந்த தாழமுக்கம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட ஆந்திராவின் கரையோரப் பகுதிக்கும் இந்தியாவின் ஒடிசாவின் தென்பகுதிக்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால் வங்காள விரிகுடா கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இதனால் மறு அறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பிராந்தியத்திற்குள் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய கடற்பிராந்தியங்களின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பிராந்தியங்களிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் காற்று அவ்வப்போது அதிகரித்து வீசக்கூடும்.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் உயரத்திற்கு எழக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.
இந்நிலையில் மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல பகுதிகளில் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.
இன்று (23) காலை 5 மணி வரையான நிலவரத்தின்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை அடைய மேலும் 4.01 அடி மட்டுமே எஞ்சியுள்ளது.
அதேபோன்று, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை அடைய மேலும் 4 அடி உயர வேண்டியுள்ளதுடன், கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை அடைய மேலும் 5 அடி உயர வேண்டியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் அதிகளவிலான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன், நுவரெலியா, ஹட்டன்–கொழும்பு, ஹட்டன்–கண்டி, ஹட்டன்–கினிகத்தேன, ஹட்டன்–மஸ்கெலியா, ஹட்டன்–நோட்டன் மற்றும் கினிகத்தேன–வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதனால் குறித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல வீதிகள் வழுக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக காபட் இடப்பட்ட வீதிகளில் வாகனங்கள் வழுக்கும் அபாயம் காணப்படுவதால், சாரதிகள் வேகத்தை கட்டுப்படுத்தி அவதானமாக பயணிக்குமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக மலைச்சரிவுகள் மற்றும் பாரிய மண்திட்டுகள் சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலையகத்தில், குறிப்பாக மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
தாழமுக்கம் வலுவடைந்தது; மலையகத்தில் ஆபத்து அதிகரிப்பு மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய காற்றுச் சுழற்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.வங்காள விரிகுடாவின் வடமேற்குப் பகுதியில், இலங்கைக்கு வடகிழக்காக சுமார் 1,000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த சக்திவாய்ந்த தாழமுக்கம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட ஆந்திராவின் கரையோரப் பகுதிக்கும் இந்தியாவின் ஒடிசாவின் தென்பகுதிக்கும் இடையில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் தாக்கத்தால் வங்காள விரிகுடா கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.இதனால் மறு அறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பிராந்தியத்திற்குள் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஏனைய கடற்பிராந்தியங்களின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பிராந்தியங்களிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் அல்லது அதற்கு அதிகமான வேகத்தில் காற்று அவ்வப்போது அதிகரித்து வீசக்கூடும்.மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் உயரத்திற்கு எழக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம்.இந்நிலையில் மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல பகுதிகளில் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.இன்று (23) காலை 5 மணி வரையான நிலவரத்தின்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவை அடைய மேலும் 4.01 அடி மட்டுமே எஞ்சியுள்ளது.அதேபோன்று, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை அடைய மேலும் 4 அடி உயர வேண்டியுள்ளதுடன், கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை அடைய மேலும் 5 அடி உயர வேண்டியுள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் அதிகளவிலான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.இதேவேளை, ஹட்டன், நுவரெலியா, ஹட்டன்–கொழும்பு, ஹட்டன்–கண்டி, ஹட்டன்–கினிகத்தேன, ஹட்டன்–மஸ்கெலியா, ஹட்டன்–நோட்டன் மற்றும் கினிகத்தேன–வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.இதனால் குறித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல வீதிகள் வழுக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக காபட் இடப்பட்ட வீதிகளில் வாகனங்கள் வழுக்கும் அபாயம் காணப்படுவதால், சாரதிகள் வேகத்தை கட்டுப்படுத்தி அவதானமாக பயணிக்குமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக மலைச்சரிவுகள் மற்றும் பாரிய மண்திட்டுகள் சரிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால் மலையகத்தில், குறிப்பாக மலைச்சரிவுகளை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.