• Apr 20 2026

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு!

shanu / Apr 20th 2026, 9:48 am
image

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 


இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 90.15 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதே, மசகு எண்ணெய் விலை மீண்டும் இவ்வாறு உயர்வடைவதற்குக் காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளதுடன், அதன் புதிய விலை 95.32 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 90.15 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதே, மசகு எண்ணெய் விலை மீண்டும் இவ்வாறு உயர்வடைவதற்குக் காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement