பன்னிபிட்டிய பகுதியில் இன்று (24) சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து,
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரவூர்தியுடன் மோதிய சொகுசு பேருந்து; ஒருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம் பன்னிபிட்டிய பகுதியில் இன்று (24) சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.