• Jul 26 2026

கடைகளுக்குள் புகுந்த சொகுசு பஸ்! சாரதியின் தூக்கக் கலக்கத்தால் மட்டக்களப்பில் பாரிய விபத்து

Chithra / Jul 26th 2026, 3:29 pm
image


கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை  பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.


அதிகாலை சுமார் 04.45 மணியளவில்  பஸ், திடீரென பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.


சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கடைகளுக்குள் புகுந்த சொகுசு பஸ் சாரதியின் தூக்கக் கலக்கத்தால் மட்டக்களப்பில் பாரிய விபத்து கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சூப்பர் லைன் பயணிகள் பஸ் ஒன்று மட்டக்களப்பு–கொழும்பு பிரதான வீதியில் தன்னாமுனை பகுதியில் இன்று (26) அதிகாலை  பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.அதிகாலை சுமார் 04.45 மணியளவில்  பஸ், திடீரென பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் அமைந்திருந்த கடைகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் பஸ் வண்டிக்கும் கடைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.சாரதி தூக்கக் கலக்கத்தில் இருந்தமையே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement