• Nov 24 2024

மஹா சிவராத்திரி விசேஷ அபிஷேக ஆராதனைகள் ஆரம்பம்

Chithra / Mar 8th 2024, 12:20 pm
image

மட்டக்களப்பு - தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று காலை  இடம்பெற்றது.

அந்த வகையில் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய ‘பாலறு பால புஸ்கரணி’ தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

காலை ஆலய பிரதம குருக்கள் தலைமையில் விசேட பூயை நடைபெற்று தீர்த்தம் ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு லிங்கத்திற்கு அபிசேகம் செய்யப்பட்டது.

பக்தர்கள் தங்கள் கைகளினால் அபிசேகம் செய்யும் நிகழ்வானது இன்று காலை தொடக்கம் நள்ளிரவு வரை இடம் பெறும்.

இவ் அபிஷேக நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.


மஹா சிவராத்திரி விசேஷ அபிஷேக ஆராதனைகள் ஆரம்பம் மட்டக்களப்பு - தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இன்று காலை  இடம்பெற்றது.அந்த வகையில் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய ‘பாலறு பால புஸ்கரணி’ தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.காலை ஆலய பிரதம குருக்கள் தலைமையில் விசேட பூயை நடைபெற்று தீர்த்தம் ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு லிங்கத்திற்கு அபிசேகம் செய்யப்பட்டது.பக்தர்கள் தங்கள் கைகளினால் அபிசேகம் செய்யும் நிகழ்வானது இன்று காலை தொடக்கம் நள்ளிரவு வரை இடம் பெறும்.இவ் அபிஷேக நிகழ்வில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement