• Nov 21 2024

மொட்டு கட்சிக்குள் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் மகிந்த..! அமைச்சர் பரபரப்புத் தகவல்

Chithra / Aug 3rd 2024, 1:42 pm
image

 

எமது வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தது சரிதான் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். இவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது பொதுஜன பெரமுனவுக்குள் மகிந்த ராஜபக்சவை தீர்மானம் எடுப்பதற்கும் ஒரு சிலர் அனுமதிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாங்கள் ஒரே அணியாக நாடாளுமன்றத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தோம். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான தீர்மானத்தை கட்சி எடுக்க வேண்டாம் என்று  கோரினோம்.

கட்சியில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் அவர் பேசினார். கட்சியின் சித்தாந்தங்கள் தொர்பில் அவருக்கு நல்ல புரிதல் இருப்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

ஆனால், கட்சியில் இருக்கும் சில உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவை சரியான தீர்மானத்தை எடுக்க அனுமதிக்கவில்லை. 

எமது வீடுகளை அழித்தது சரியான விடயம் தான் என்று நண்பர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்காக நான் வருத்தப்படுகின்றேன்.

எமது வீடுகளை அழித்தது மிகச் சரியானது என்று கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை உண்டு என கேள்வி எழுப்பியுள்ளார்.

மொட்டு கட்சிக்குள் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் மகிந்த. அமைச்சர் பரபரப்புத் தகவல்  எமது வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தது சரிதான் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். இவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.தற்போது பொதுஜன பெரமுனவுக்குள் மகிந்த ராஜபக்சவை தீர்மானம் எடுப்பதற்கும் ஒரு சிலர் அனுமதிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அநுராதபுரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நாங்கள் ஒரே அணியாக நாடாளுமன்றத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தோம். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான தீர்மானத்தை கட்சி எடுக்க வேண்டாம் என்று  கோரினோம்.கட்சியில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் அவர் பேசினார். கட்சியின் சித்தாந்தங்கள் தொர்பில் அவருக்கு நல்ல புரிதல் இருப்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.ஆனால், கட்சியில் இருக்கும் சில உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவை சரியான தீர்மானத்தை எடுக்க அனுமதிக்கவில்லை. எமது வீடுகளை அழித்தது சரியான விடயம் தான் என்று நண்பர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்காக நான் வருத்தப்படுகின்றேன்.எமது வீடுகளை அழித்தது மிகச் சரியானது என்று கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை உண்டு என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement