• May 08 2025

சுகயீனம் காரணமாக வாக்களிப்பதற்கு செல்லாத மஹிந்த ராஜபக்ஷ! வெளியான தகவல்

Chithra / May 7th 2025, 2:28 pm
image


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தது. 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மாத்திரமே மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்திய ஆலோசனைகளின்படி தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள்  கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


சுகயீனம் காரணமாக வாக்களிப்பதற்கு செல்லாத மஹிந்த ராஜபக்ஷ வெளியான தகவல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மாத்திரமே மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் வைத்திய ஆலோசனைகளின்படி தனது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள்  கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement