• Aug 14 2025

மகிந்த ராஜபக்ச சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய வீரர்! திலித் ஜயவீர புகழாரம்

Chithra / Aug 13th 2025, 9:09 am
image

 

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மஹிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்துவதும், அவமானப்படுத்துவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள். 

ராஜபக்ச குடும்பத்தின் பேராசை குறித்து நான் பல தடவைகள் விமர்சித்துள்ளேன். ஆனாலும் மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய, கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு வீரர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்வதன் மூலம் எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த முடியும் என்ற கணக்கு விபரங்களை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா? அது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிடுவார்களா என்றும் திலித் ஜயவீர கேள்வியெழுப்பியுள்ளார்.  

மகிந்த ராஜபக்ச சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய வீரர் திலித் ஜயவீர புகழாரம்  முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மஹிந்த ராஜபக்சவை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.சர்வஜன அதிகாரம் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.யுத்தத்தை வெற்றி கொண்ட மகிந்த ராஜபக்சவை இழிவுபடுத்துவதும், அவமானப்படுத்துவதுமே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்கள். ராஜபக்ச குடும்பத்தின் பேராசை குறித்து நான் பல தடவைகள் விமர்சித்துள்ளேன். ஆனாலும் மகிந்த ராஜபக்ச என்பவர் சிலை வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய, கௌரவிக்கப்பட வேண்டிய ஒரு வீரர்.முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்வதன் மூலம் எவ்வளவு தொகையை மிச்சப்படுத்த முடியும் என்ற கணக்கு விபரங்களை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா அது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிடுவார்களா என்றும் திலித் ஜயவீர கேள்வியெழுப்பியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement