நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் எனப்படும் இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட
70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில்
இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசை மஹிந்த வென்றிருப்பார் - நாமல் வெளியிட்ட தகவல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சட்டமா அதிபர் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் எனப்படும் இந்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.