வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கும் பணிகள் இன்றுடன் (16) நிறைவடையவுள்ளதால் பிரதான கட்சிகள், சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூறாவளிப் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
பிரதான அரசியல் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மௌபிம ஜனதாக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதேபோன்று வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும், மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கும் தமிழ்க் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை இன்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது.
சூறாவளிப் பரப்புரைக்கு தயாராகும் பிரதான கட்சிகள் - விருப்பு எண்கள் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கும் பணிகள் இன்றுடன் (16) நிறைவடையவுள்ளதால் பிரதான கட்சிகள், சுயேச்சைக் குழுக்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூறாவளிப் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.பிரதான அரசியல் கட்சிகளான தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மௌபிம ஜனதாக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.இதேபோன்று வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும், மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கும் தமிழ்க் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை இன்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது.