மஹவ முதல் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை நோக்கி பயணம் செய்யும் சரக்கு மற்றும் எரிபொருள் ரயில் சேவைகள் இன்று நள்ளிரவு (23) முதல் நிறுத்தப்படவுள்ளன.
இதனை ரயில்வே லொகோமோட்டிவ் ஒபரேட்டிங் இன்ஜினியர்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, நாளை இரவு சேவையில் ஈடுபடும் 'இரவு தபால் ரயில்' சேவைகளிலிருந்தும் விலக எதிர்பார்ப்பதாக சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,
ரயில்களில் யானைகள் மோதுவதால் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன.
மஹவயிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் போது ஏற்படும் யானை - ரயில் மோதல்களால் காட்டு யானைகளுக்கும் ரயில்களுக்கும் சேதம் ஏற்படுகிறது.
ரயில் இயந்திர சாரதிகளால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை;
இது ரயில் சாரதிகளுக்கும் பெரும் சிக்கலாக மாற்றியுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்ந்தால், இப்பகுதிகள் ஊடாக ரயில்களை இயக்க முடியாத நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் பயணிகள் உரிய நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும்.
எனவே இதற்கு உரிய தீர்வு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் முக்கிய ரயில் சேவைகள் மஹவ முதல் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை நோக்கி பயணம் செய்யும் சரக்கு மற்றும் எரிபொருள் ரயில் சேவைகள் இன்று நள்ளிரவு (23) முதல் நிறுத்தப்படவுள்ளன.இதனை ரயில்வே லொகோமோட்டிவ் ஒபரேட்டிங் இன்ஜினியர்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ தெரிவித்தார்.இதற்கு மேலதிகமாக, நாளை இரவு சேவையில் ஈடுபடும் 'இரவு தபால் ரயில்' சேவைகளிலிருந்தும் விலக எதிர்பார்ப்பதாக சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்,ரயில்களில் யானைகள் மோதுவதால் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன.மஹவயிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் போது ஏற்படும் யானை - ரயில் மோதல்களால் காட்டு யானைகளுக்கும் ரயில்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. ரயில் இயந்திர சாரதிகளால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை; இது ரயில் சாரதிகளுக்கும் பெரும் சிக்கலாக மாற்றியுள்ளது.இந்த பிரச்சினை தொடர்ந்தால், இப்பகுதிகள் ஊடாக ரயில்களை இயக்க முடியாத நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.இதனால் பயணிகள் உரிய நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும்.எனவே இதற்கு உரிய தீர்வு அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.