இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் லங்கா தனியார் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இப்பயணத்தின் முடிவில், மலேசியாவின் முன்னணி வர்த்தகர்களைக் கொண்ட ‘ShadowFax’ மோட்டார் சைக்கிள் கழக உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார் கமகே அவர்களைச் சந்தித்தனர்.
2013ஆம் ஆண்டு முதல் ‘கொழும்பு மோட்டார் சைக்கிள் வாரத்தை’ தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் நிறுவனம், இம்முறை மலேசியாவின் முக்கிய வர்த்தகர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.
ShadowFax குழுவினர் இலங்கையில் இவ்வாறான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்; இதற்கு முன்னர் அவர்கள் 2016 ஆம் ஆண்டு இவ்வாறானதொரு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
25 வருட அனுபவம் கொண்ட மோட்டார் சைக்கிள் வீரரான ‘டத்தோ’ முருகாநந்தம் தலைமையில் வந்த இக்குழுவினர், அமெரிக்க தயாரிப்பான 1500cc - 1900cc எஞ்சின் கொள்ளளவு கொண்ட ‘ஹார்லி டேவிட்சன்’ ரக மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பயணித்தனர்.
ஏப்ரல் 06 முதல் 17 வரை நடைபெற்ற இந்தப் பயணம் கொழும்பு, யாழ்ப்பாணம், பாசிக்குடா, அறுகம்பே, மஹியங்கனை, கண்டி, நுவரெலியா, பண்டாரவளை மற்றும் ஹிக்கடுவை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.
இச்சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானம் கிடைத்துள்ளது. இதில் ஹோட்டல் தங்குமிடம், விமானப் பயணம், எரிபொருள், உணவு, தனிப்பட்ட செலவுகள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் என்பன அடங்கும்.
நேற்றைய தினம் கொழும்பு "காலி முகத்திடல் ஹோட்டலில்" நடைபெற்ற இந்த விசேட சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே, இவ்வாறான அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பு கிடைப்பதாகத் தெரிவித்தார். இக்குழுவினருக்கு ஆதரவாக இலங்கையின் ‘Bikerholics’ மோட்டார் சைக்கிள் கழகத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்களும் இப்பயணத்தில் இணைந்திருந்தனர்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்திய மலேசியா மோட்டார் சைக்கிள் குழு - ஒரு லட்சம் டொலரை ஈட்டிய அதிரடி பயணம் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் லங்கா தனியார் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இப்பயணத்தின் முடிவில், மலேசியாவின் முன்னணி வர்த்தகர்களைக் கொண்ட ‘ShadowFax’ மோட்டார் சைக்கிள் கழக உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார் கமகே அவர்களைச் சந்தித்தனர்.2013ஆம் ஆண்டு முதல் ‘கொழும்பு மோட்டார் சைக்கிள் வாரத்தை’ தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வரும் பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் நிறுவனம், இம்முறை மலேசியாவின் முக்கிய வர்த்தகர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.ShadowFax குழுவினர் இலங்கையில் இவ்வாறான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்; இதற்கு முன்னர் அவர்கள் 2016 ஆம் ஆண்டு இவ்வாறானதொரு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.25 வருட அனுபவம் கொண்ட மோட்டார் சைக்கிள் வீரரான ‘டத்தோ’ முருகாநந்தம் தலைமையில் வந்த இக்குழுவினர், அமெரிக்க தயாரிப்பான 1500cc - 1900cc எஞ்சின் கொள்ளளவு கொண்ட ‘ஹார்லி டேவிட்சன்’ ரக மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பயணித்தனர்.ஏப்ரல் 06 முதல் 17 வரை நடைபெற்ற இந்தப் பயணம் கொழும்பு, யாழ்ப்பாணம், பாசிக்குடா, அறுகம்பே, மஹியங்கனை, கண்டி, நுவரெலியா, பண்டாரவளை மற்றும் ஹிக்கடுவை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.இச்சுற்றுப்பயணத்தின் மூலம் இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானம் கிடைத்துள்ளது. இதில் ஹோட்டல் தங்குமிடம், விமானப் பயணம், எரிபொருள், உணவு, தனிப்பட்ட செலவுகள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் என்பன அடங்கும்.நேற்றைய தினம் கொழும்பு "காலி முகத்திடல் ஹோட்டலில்" நடைபெற்ற இந்த விசேட சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே, இவ்வாறான அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பு கிடைப்பதாகத் தெரிவித்தார். இக்குழுவினருக்கு ஆதரவாக இலங்கையின் ‘Bikerholics’ மோட்டார் சைக்கிள் கழகத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்களும் இப்பயணத்தில் இணைந்திருந்தனர்.