• Dec 06 2024

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள் - சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் கைது

Chithra / Nov 5th 2024, 9:59 am
image

 


ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உருவப்படமும் அவரது கையொப்பமும் இடப்பட்ட புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்தில் இதுவரையில் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள் - சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் கைது  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் உருவப்படமும் அவரது கையொப்பமும் இடப்பட்ட புதிய நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்தில் இதுவரையில் நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement