• Jan 19 2025

மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Chithra / Dec 31st 2024, 11:12 am
image

 

மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொனரவில பிரதேசத்தில் நேற்று காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் மாத்தளை, மொனரவில பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். 

இவர் நேற்றையதினம் காணி ஒன்றிலிருந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது அருகிலிருந்த மின்சாரக் கம்பிகள் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சடலமானது மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு  மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொனரவில பிரதேசத்தில் நேற்று காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மாத்தளை, மொனரவில பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். இவர் நேற்றையதினம் காணி ஒன்றிலிருந்த மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது அருகிலிருந்த மின்சாரக் கம்பிகள் மீது மோதியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement