யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியதுடன், மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
தங்கன்குளம் செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த 37 வயதுடைய தேவகருணதாசா ஜூட் மற்றும் சிவனேசன் திபிசன் என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார்.
அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணி புரியும் இளைஞர் ஒருவரும், குறித்த விருந்தினரும் இன்று மாலை கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்
இந்நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு மற்றையவர் முயன்ற சமயம் அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கிய இருவரது சடலங்களுமே தற்போது கரையொதுங்கியுள்ளன..
கடலில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்பு. யாழில் பரபரப்பு யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் ஒருவரது சடலம் கரையொதுங்கியதுடன், மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.தங்கன்குளம் செட்டிக்குளம், வவுனியாவைச் சேர்ந்த 37 வயதுடைய தேவகருணதாசா ஜூட் மற்றும் சிவனேசன் திபிசன் என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு விருந்தினராக வந்துள்ளார். அந்த விடுதியின் உரிமையாளரும், அங்கு பணி புரியும் இளைஞர் ஒருவரும், குறித்த விருந்தினரும் இன்று மாலை கடலில் குளிப்பதற்கு சென்றுள்ளனர்இந்நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்கு மற்றையவர் முயன்ற சமயம் அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இவ்வாறு நீரில் மூழ்கிய இருவரது சடலங்களுமே தற்போது கரையொதுங்கியுள்ளன.