• May 31 2026

பெண்ணைக் கொலை செய்துவிட்டு ஆண் தற்கொலை! நிக்கதலுபொத்தையில் சம்பவம்

Chithra / May 31st 2026, 12:50 pm
image

குருணாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கதலுபொத்த பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அதே வீட்டில் ஆண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த ஆண் 40 வயதுடையவரும், பெண் 49 வயதுடையவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இருவரும் நிக்கதலுபொத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண்ணை கொலை செய்துவிட்டு, 

அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பெண்ணைக் கொலை செய்துவிட்டு ஆண் தற்கொலை நிக்கதலுபொத்தையில் சம்பவம் குருணாகல் மாவட்டம் வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கதலுபொத்த பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அதே வீட்டில் ஆண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த ஆண் 40 வயதுடையவரும், பெண் 49 வயதுடையவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இருவரும் நிக்கதலுபொத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement