• Nov 23 2024

மட்டக்களப்பில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிசாருக்கு பணிப்புரை...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 1:00 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  பொலிசாருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் பணிப்புரை விடுத்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சித்தாண்டி கிரான்  வாகரை வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பிரதான வீதியை குறுக்கறத்து, கடந்து வெள்ளநீர் செல்வதால் அப்பகுதி இல்லாத போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மாவட்ட அரசாங்க அதிபரினால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மட்டக்களப்பு, நாசிவன் தீவு பகுதியிலும் பிரதான வீதி ஊடாக இரண்டு அடிக்கு மேலாக வெள்ள நீர் வேகமாக கடந்து செல்வதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வேடிக்கை பார்க்க செல்வதும் ஆபத்தான முறையில் அதனை கடந்து செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது

 இதேவேளை நேற்று மாலை வாழைச்சேனைப் பகுதியைத் தேர்ந்த இளைஞர் பாதையை ஊடாக கடந்து செல்ல முற்பட்ட போது வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இவரைத் தேடும் பணிகளில் அப்பகுதி மீனவர்களும் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று கள நிலவரம் ஆராய்ந்து உடனடியாக பொலீசாருக்கு வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படி பணிப்புரை விடுத்ததுடன், மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்க உள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் கருத்து தெரிவித்தார். 

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கள விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.



மட்டக்களப்பில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிசாருக்கு பணிப்புரை.samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தில்  வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  பொலிசாருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் பணிப்புரை விடுத்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சித்தாண்டி கிரான்  வாகரை வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பிரதான வீதியை குறுக்கறத்து, கடந்து வெள்ளநீர் செல்வதால் அப்பகுதி இல்லாத போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்ட அரசாங்க அதிபரினால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுமட்டக்களப்பு, நாசிவன் தீவு பகுதியிலும் பிரதான வீதி ஊடாக இரண்டு அடிக்கு மேலாக வெள்ள நீர் வேகமாக கடந்து செல்வதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வேடிக்கை பார்க்க செல்வதும் ஆபத்தான முறையில் அதனை கடந்து செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது இதேவேளை நேற்று மாலை வாழைச்சேனைப் பகுதியைத் தேர்ந்த இளைஞர் பாதையை ஊடாக கடந்து செல்ல முற்பட்ட போது வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவரைத் தேடும் பணிகளில் அப்பகுதி மீனவர்களும் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.சம்பவத்தை கேள்வியுற்ற மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று கள நிலவரம் ஆராய்ந்து உடனடியாக பொலீசாருக்கு வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படி பணிப்புரை விடுத்ததுடன், மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்க உள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் கருத்து தெரிவித்தார். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கள விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement