• Nov 23 2024

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு - பிற்போடப்பட்டது தீர்ப்புக்கான திகதி..!

Chithra / Jun 6th 2024, 11:59 am
image

  


2013 ஆம் ஆண்டு தமிழ் மீனவர்களின் உரித்தை பாதிக்கும் வகையில் முஸ்லிம் மீனவர்கள் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து, நெருப்பு வைத்து மூன்று உயர் அதிகாரிகள், 6 பொலிசார் உட்பட பல பொதுமக்கள் காயமடைவதற்கு காரணமாக இருந்து, நீதிமன்ற கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதம் விளைவித்த வழக்கு இன்றையதினம், மன்னார் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக திகதி இடப்பட்டு இருந்தது.

எதிரிகள் சார்பில் சட்டத்தரணி குணைஸ் பாருக் இன்றையதினம் மன்றில் ஆஜராகி இருந்தார். 

சாட்சிகளின் நலனை பேணுவதற்காக சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணி மகேந்திரன் ஆகியோரும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.

இன்றையதினம் வழக்கு தொடுநர் தரப்பினர், எழுத்து மூலமான சமர்ப்பணத்தை தாக்கல் செய்வதற்கு மேலதிகமான கால அவகாசம் கேட்டபடியால், இன்றையதினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட இந்த வழக்கு, தீர்ப்புக்காக எதிர்வருகின்ற ஏழாம் மாதம் 18ம் தேதி திகதியிடப்பட்டது.

வழக்கு தொடடுநர் தரப்பு எதிர்வரும் ஆறாம் மாதம் இருபதாம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான சமர்ப்பணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கின்றது.

2013 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து சட்டத்தரணிகளும், ஊடகவியலாளர்களும் மன்னாருக்கு சென்று இந்த வழக்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என செயற்பட்டனர். 

ஆனால் திரட்சியை தற்போது காண முடியவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பில் இரண்டு சட்டத்தரணிகள் மாத்திரமே ஆஜராகி இருந்தனர்.

மன்னார் நீதிமன்று மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மன்னார்  நகரத்தை ஒட்டிய கோந்தைப்பிட்டி, கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மீன்பிடித்துறை பகுதியாகும்.

போர்ச்சூழலில் இடம்பெயர்ந்து புத்தளம் பகுதிக்குச் சென்றிருந்த முஸ்லிம் மீனவர்கள் திரும்பி மன்னார் வந்தபோது கோந்தைப்பிட்டி மீன்பிடி துறையைத் தம்மிடம் முழுமையாக மீளத் தருமாறு கேட்டிருந்தனர். 

இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கென மன்னார் நகரில் இரண்டாம் கட்டைப் பகுதியில் வேறு இடம் நீதிமன்றத்தால்  ஒதுக்கப்பட்டது. 

ஆனால் அந்த இடத்திற்கு இன்னொரு   முஸ்லிம் மீனவர் ஒருவர் உரிமை கோரியும் தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்க தடை கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அங்கும் அவர்களால் மீன்பிடித்தொழில்  செய்ய முடியவில்லை.

இந்த வழக்கு முடியும் வரையில் தமிழ் மீனவர்களை கோந்தைப்பிட்டியிலேயே தொழில் செய்ய அனுமதிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அந்த தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் மீனவர்கள்  கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்த தமிழ் மீனவர்களின் மீன்வாடிகள், மீன்பிடி படகுகள் ௭ன்பவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். 

இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் 2012 யூலை 16ம் திகதியன்று உத்தரவிட்டது. 

நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் மீனவர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி காவல்துறையினர் மீதும், நீதிமன்றக் கட்டிடத்தின் மீதும், வாகனங்கள் மீதும் கற்களையும், கொட்டன்களையும் வீசி பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். 

இந்த நீதிமன்று மீதான தாக்குதலின் போது மூன்று உயர் அதிகாரிகள் உட்பட ஆறு காவல்துறையினரும், பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர்.  

மேலும் மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 

இதனையடுத்து இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு நிலவரம் மோசமடைந்தது

மன்னார் நீதிமன்று மீதான தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து அப்போது மன்னார் நீதவானாக கடமையாற்றிய  நீதவான் ஏ.யூட்சன் அவர்களை அச்சமயத்தில்  அமைச்சராக இருந்த  ரிசாட் பதியுதீன் தொலைபேசியினூடாக அச்சுறுத்தியிருந்தார்.  

இதனை தொடர்ந்து இலங்கையின் வடக்கு பகுதிகளெங்கும்  மன்னார் நீதவானை அச்சுறுத்திய  அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்யவேண்டும் எனக்கோரி  சட்டத்தரணிகள் போராட்டங்கள் பலவற்றையும் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைக்கும், தமிழ் கத்தோலிக்க மீனவர்களின் சொத்துகளையும், உடமைகளையும் அடித்து நொறுக்கி பாரியளவில்  சேதப்படுத்தியமைக்கும் குற்றவாளிகளுக்கு தக்கமுறையில் தீர்ப்பளிக்கப்படுமா? நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்படுமா? என நீதிக்காக போராடுபவர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.


மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு - பிற்போடப்பட்டது தீர்ப்புக்கான திகதி.   2013 ஆம் ஆண்டு தமிழ் மீனவர்களின் உரித்தை பாதிக்கும் வகையில் முஸ்லிம் மீனவர்கள் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து, நெருப்பு வைத்து மூன்று உயர் அதிகாரிகள், 6 பொலிசார் உட்பட பல பொதுமக்கள் காயமடைவதற்கு காரணமாக இருந்து, நீதிமன்ற கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதம் விளைவித்த வழக்கு இன்றையதினம், மன்னார் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக திகதி இடப்பட்டு இருந்தது.எதிரிகள் சார்பில் சட்டத்தரணி குணைஸ் பாருக் இன்றையதினம் மன்றில் ஆஜராகி இருந்தார். சாட்சிகளின் நலனை பேணுவதற்காக சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணி மகேந்திரன் ஆகியோரும் மன்றில் ஆஜராகி இருந்தனர்.இன்றையதினம் வழக்கு தொடுநர் தரப்பினர், எழுத்து மூலமான சமர்ப்பணத்தை தாக்கல் செய்வதற்கு மேலதிகமான கால அவகாசம் கேட்டபடியால், இன்றையதினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்ட இந்த வழக்கு, தீர்ப்புக்காக எதிர்வருகின்ற ஏழாம் மாதம் 18ம் தேதி திகதியிடப்பட்டது.வழக்கு தொடடுநர் தரப்பு எதிர்வரும் ஆறாம் மாதம் இருபதாம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான சமர்ப்பணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கின்றது.2013 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து சட்டத்தரணிகளும், ஊடகவியலாளர்களும் மன்னாருக்கு சென்று இந்த வழக்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என செயற்பட்டனர். ஆனால் திரட்சியை தற்போது காண முடியவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பில் இரண்டு சட்டத்தரணிகள் மாத்திரமே ஆஜராகி இருந்தனர்.மன்னார் நீதிமன்று மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,மன்னார்  நகரத்தை ஒட்டிய கோந்தைப்பிட்டி, கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மீன்பிடித்துறை பகுதியாகும்.போர்ச்சூழலில் இடம்பெயர்ந்து புத்தளம் பகுதிக்குச் சென்றிருந்த முஸ்லிம் மீனவர்கள் திரும்பி மன்னார் வந்தபோது கோந்தைப்பிட்டி மீன்பிடி துறையைத் தம்மிடம் முழுமையாக மீளத் தருமாறு கேட்டிருந்தனர். இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கென மன்னார் நகரில் இரண்டாம் கட்டைப் பகுதியில் வேறு இடம் நீதிமன்றத்தால்  ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்திற்கு இன்னொரு   முஸ்லிம் மீனவர் ஒருவர் உரிமை கோரியும் தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்க தடை கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அங்கும் அவர்களால் மீன்பிடித்தொழில்  செய்ய முடியவில்லை.இந்த வழக்கு முடியும் வரையில் தமிழ் மீனவர்களை கோந்தைப்பிட்டியிலேயே தொழில் செய்ய அனுமதிக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.ஆனால் அந்த தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் மீனவர்கள்  கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்த தமிழ் மீனவர்களின் மீன்வாடிகள், மீன்பிடி படகுகள் ௭ன்பவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் 2012 யூலை 16ம் திகதியன்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் மீனவர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி காவல்துறையினர் மீதும், நீதிமன்றக் கட்டிடத்தின் மீதும், வாகனங்கள் மீதும் கற்களையும், கொட்டன்களையும் வீசி பெரும் தாக்குதலை மேற்கொண்டனர். இந்த நீதிமன்று மீதான தாக்குதலின் போது மூன்று உயர் அதிகாரிகள் உட்பட ஆறு காவல்துறையினரும், பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர்.  மேலும் மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு நிலவரம் மோசமடைந்ததுமன்னார் நீதிமன்று மீதான தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து அப்போது மன்னார் நீதவானாக கடமையாற்றிய  நீதவான் ஏ.யூட்சன் அவர்களை அச்சமயத்தில்  அமைச்சராக இருந்த  ரிசாட் பதியுதீன் தொலைபேசியினூடாக அச்சுறுத்தியிருந்தார்.  இதனை தொடர்ந்து இலங்கையின் வடக்கு பகுதிகளெங்கும்  மன்னார் நீதவானை அச்சுறுத்திய  அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்யவேண்டும் எனக்கோரி  சட்டத்தரணிகள் போராட்டங்கள் பலவற்றையும் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைக்கும், தமிழ் கத்தோலிக்க மீனவர்களின் சொத்துகளையும், உடமைகளையும் அடித்து நொறுக்கி பாரியளவில்  சேதப்படுத்தியமைக்கும் குற்றவாளிகளுக்கு தக்கமுறையில் தீர்ப்பளிக்கப்படுமா நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்படுமா என நீதிக்காக போராடுபவர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement