• Oct 15 2024

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி சாதனை..!

Sharmi / Oct 15th 2024, 9:53 pm
image

Advertisement

கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார்  முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற  தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை மன்னார் மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், பெருமையை பெற்றுத் தந்துள்ளார்.

இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் மாணவி சாதனை. கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார்  முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற  தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை மன்னார் மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும், பெருமையை பெற்றுத் தந்துள்ளார்.இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement