• Nov 28 2024

வட்டுக்கோட்டையில் பாரதி வீதியை திறந்து வைத்த மறவன்புலவு சச்சிதானந்தம்..!

Sharmi / Sep 11th 2024, 1:22 pm
image

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம்(11)  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டது. 

வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு குறித்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது.

விருந்தினர்கள் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனை தொடர்ந்து விருந்தினர்களது  உரைகள், வீதி திறந்து வைப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.

யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மதகுருமார், வலிமேற்கு பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார், வலிமேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் திரு.சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வட்டுக்கோட்டையில் பாரதி வீதியை திறந்து வைத்த மறவன்புலவு சச்சிதானந்தம். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம்(11)  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டது. வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள குறித்த வீதிக்கு பாரதி வீதி என பெயர் சூட்டப்பட்டு குறித்த வீதியானது திறந்து வைக்கப்பட்டது.விருந்தினர்கள் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனை தொடர்ந்து விருந்தினர்களது  உரைகள், வீதி திறந்து வைப்பு வைபவம் என்பன இடம்பெற்றன.யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மதகுருமார், வலிமேற்கு பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார், வலிமேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் திரு.சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement