• Sep 28 2026

திருமணம், தனியார் விருந்துகளில் இசை உரிமம் நிறுத்தப்பட்டதா? - வெளியான அறிவிப்பு

Chithra / Sep 28th 2026, 12:45 pm
image


திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் டிஜே (DJ) நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமத் தேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) தெரிவித்துள்ளது.


தமது உறுப்பினர்களிடமிருந்து மேலதிக முடிவுகள் கிடைக்கும் வரை இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.


திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை தொடர்வதா என்பது தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அந்தச் சங்கம்  குறிப்பிட்டுள்ளது.


அத்துடன், உரிமம் வழங்கும் முறையில் நிரந்தரமான மாற்றங்களை மேற்கொள்வதற்கு சங்கத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், இவ்வாறான மாற்றம் தொடர்பில் நிர்வாகக் குழுவால் தனித்து முடிவெடுக்க முடியாது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


சர்வதேச உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்பும் டிஜேக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.


எனினும், இசையை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தமது உரிமக் கட்டமைப்பு பொருந்தும் என இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) தெரிவித்துள்ளது.


வீடுகளில் இடம்பெறும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்த உரிமக் கட்டமைப்பு பொருந்தாது எனவும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


திருமணம், தனியார் விருந்துகளில் இசை உரிமம் நிறுத்தப்பட்டதா - வெளியான அறிவிப்பு திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் டிஜே (DJ) நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமத் தேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) தெரிவித்துள்ளது.தமது உறுப்பினர்களிடமிருந்து மேலதிக முடிவுகள் கிடைக்கும் வரை இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை தொடர்வதா என்பது தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என அந்தச் சங்கம்  குறிப்பிட்டுள்ளது.அத்துடன், உரிமம் வழங்கும் முறையில் நிரந்தரமான மாற்றங்களை மேற்கொள்வதற்கு சங்கத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், இவ்வாறான மாற்றம் தொடர்பில் நிர்வாகக் குழுவால் தனித்து முடிவெடுக்க முடியாது என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.சர்வதேச உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்பும் டிஜேக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.எனினும், இசையை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் வர்த்தக நிலையங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே தமது உரிமக் கட்டமைப்பு பொருந்தும் என இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) தெரிவித்துள்ளது.வீடுகளில் இடம்பெறும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்த உரிமக் கட்டமைப்பு பொருந்தாது எனவும் அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement