கிரிபத்கொட நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பேலியகொடை தீயணைப்புப் பிரிவில் இருந்து பல வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இந்தத் தீ விபத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கருத்திற்கொண்டும், தீயணைப்பு வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கும் வசதியாக, கிரிபத்கொட நகரின் ஊடாகச் செல்லும் கொழும்பு - கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த வீதியில் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் கடவத்தை மற்றும் ஏனைய உட்புற வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், உயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தீயைக் கட்டுப்படுத்திய பின்னர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் போவதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபத்கொடவில் பாரிய தீ விபத்து; கொழும்பு - கண்டி வீதி தற்காலிகமாக மூடல் கிரிபத்கொட நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேலியகொடை தீயணைப்புப் பிரிவில் இருந்து பல வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.இந்தத் தீ விபத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கருத்திற்கொண்டும், தீயணைப்பு வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கும் வசதியாக, கிரிபத்கொட நகரின் ஊடாகச் செல்லும் கொழும்பு - கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வீதியில் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் கடவத்தை மற்றும் ஏனைய உட்புற வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், உயிர்ச் சேதங்கள் குறித்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தீயைக் கட்டுப்படுத்திய பின்னர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப் போவதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.