மாரவில - புலுகஹவெவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, 236 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 9315 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஜெயபீம பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கம்பஹா - மாஹேவிட்ட பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை லொறியில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற லொறியை சோதனைக்குட்படுத்தியபோது, குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 789,500 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 33 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பாரிய சட்டவிரோத மதுபான, போதைப்பொருள் சுற்றிவளைப்பு: மூவர் கைது மாரவில - புலுகஹவெவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.மாரவில பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, 236 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 9315 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் ஜெயபீம பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதேவேளை, கம்பஹா - மாஹேவிட்ட பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1080 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை லொறியில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற லொறியை சோதனைக்குட்படுத்தியபோது, குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.சுமார் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 789,500 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்கள் 33 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.