• May 12 2024

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு பாரிய அநீதி! ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு SamugamMedia

Chithra / Mar 4th 2023, 11:57 am
image

Advertisement

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சை முடிவடைந்து 02 வாரங்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.


உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு பாரிய அநீதி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு SamugamMedia கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தாமதமாவதால், பரீட்சார்த்திகள் பாரிய அநீதிக்கு உள்ளாகி வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சர் முன்மொழிந்த கொடுப்பனவுகளில் இருந்து ஆயிரம் ரூபாவைக் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.உயர்தரப் பரீட்சை முடிவடைந்து 02 வாரங்கள் கடந்துள்ள போதிலும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement