இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இன்று (07) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தீவிர மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வயநாடு மாவட்டம் மெப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடி பகுதியில், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'அனக்கோம்பொயில் – மெப்பாடி' இரட்டைச் சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கடும் மழையால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இடம்பெறும் மீனாட்சி பாலம் பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
நிலச்சரிவில் சுரங்கப்பாதை பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள், சில வீடுகள் மற்றும் வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை உள்ளூர் மக்களின் உதவியுடன் 5 பணியாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வயநாட்டில் பாரிய நிலச்சரிவு; மண்ணுக்குள் புதைந்த பலர் - தீவிரமாகும் மீட்புப் பணிகள் இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இன்று (07) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தீவிர மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வயநாடு மாவட்டம் மெப்பாடிக்கு அருகிலுள்ள கல்லாடி பகுதியில், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் 'அனக்கோம்பொயில் – மெப்பாடி' இரட்டைச் சுரங்கப்பாதை சாலைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் கடும் மழையால், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இடம்பெறும் மீனாட்சி பாலம் பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.நிலச்சரிவில் சுரங்கப்பாதை பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள், சில வீடுகள் மற்றும் வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை உள்ளூர் மக்களின் உதவியுடன் 5 பணியாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.