• May 06 2024

அடுத்தடுத்து முறிந்து வீழ்ந்த பாரிய மரங்கள் – 8 வாகனங்கள் சேதம்..! இருவர் வைத்தியசாலையில்!

Chithra / Dec 27th 2023, 3:33 pm
image

Advertisement

 

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இன்று(27) காலை 11 மணியளவில் அடுத்தடுத்து இருந்த இந்த மரங்களே இவ்வாறு வீழ்ந்துள்ளன.

மழை காரணமாக இந்த மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அடுத்தடுத்து முறிந்து வீழ்ந்த பாரிய மரங்கள் – 8 வாகனங்கள் சேதம். இருவர் வைத்தியசாலையில்  கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.இன்று(27) காலை 11 மணியளவில் அடுத்தடுத்து இருந்த இந்த மரங்களே இவ்வாறு வீழ்ந்துள்ளன.மழை காரணமாக இந்த மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதனால், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement