கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையே நேற்று (07) சந்திப்பொன்று இடம்பெற்றது.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான பயன்படுத்த முடியாத வாகனங்களை ஏலத்தில் விடுதல், வாகனங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் பயன்படுத்துதல் விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
மேலும், ஜப்பானிய உதவியின் கீழ் வழங்கப்படும் கம்பேக்டர் இயந்திரங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்குதல், கழிவு முகாமைத்துவம் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை நெறிப்படுத்துதல் மற்றும் வினைத்திறன்மிக்க தாக்குதல் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இசட்.ஏ.எம். பைசல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு ஆளுநருக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையே நேற்று (07) சந்திப்பொன்று இடம்பெற்றது.திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இந்த சந்திப்பில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான பயன்படுத்த முடியாத வாகனங்களை ஏலத்தில் விடுதல், வாகனங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் பயன்படுத்துதல் விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.மேலும், ஜப்பானிய உதவியின் கீழ் வழங்கப்படும் கம்பேக்டர் இயந்திரங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்குதல், கழிவு முகாமைத்துவம் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை நெறிப்படுத்துதல் மற்றும் வினைத்திறன்மிக்க தாக்குதல் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இசட்.ஏ.எம். பைசல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி உள்ளூராட்சி ஆணையர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.