• Nov 22 2024

வடக்கு மாகாண ஆளுநருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு!

Tamil nila / Sep 9th 2024, 7:09 pm
image

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின்  யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார்.



அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர் அவர்கள், மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தினார்.


வடக்கு மாகாண ஆளுநருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின்  யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார்.அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர் அவர்கள், மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement