• Dec 15 2024

பதவி விலகிய மாவையின் தலைமையில் கூட்டம் நடாத்த முடியாது; தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் குழப்பம்..!

Sharmi / Dec 14th 2024, 1:27 pm
image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மாவை.சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையகூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார்.

இதன்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார். 

இதனால் கூட்டத்தில்  குழப்பநிலை ஏற்பட்டது. 

அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு இரா.சாணக்கியன் கடும்தொனியில் தெரிவித்தார். 

மாவைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தி வருவீர்களா என கேட்குமாறு சிவமோகன் தெரிவித்த போது இது கோல்சென்ரர்அல்ல. கட்சி. உங்கள் வைத்தியசாலை அல்ல இது.என்று சாணக்கியன் பதில் அளித்தார். 

அவர்மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறினர். இதனால் சிவமோகனுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

கூட்டத்தை உபதலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள் அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டிவரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.

தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையினால் நீண்டநேரமாக கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் போர்க்களமாக மாறியது. 

சிவமோகனுக்கு அருகில் எழுந்துசென்ற சுமந்திரன் அவரை சாமாளிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்கவில்லை. 

இந்நிலையில் 10.45மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை.சேனாதிராஜா வருகை தந்திருந்தார். 

இதன்போது உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த ஏலாது மாவைஐயா. 

எனவே அந்த கதிரையில் இருக்க வேண்டாம் இந்தபக்கம் இருங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவருக்கு தெரிவித்தார்.

அதனை பொருட்படுத்தாத மாவை.சேனாதிராஜா முன்பகுதியில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தார். 

அதன்பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



பதவி விலகிய மாவையின் தலைமையில் கூட்டம் நடாத்த முடியாது; தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் குழப்பம். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மாவை.சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்றையகூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார்.இதன்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடாத்தவேண்டாம் என தெரிவித்திருந்தார். இதனால் கூட்டத்தில்  குழப்பநிலை ஏற்பட்டது. அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடித்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு இரா.சாணக்கியன் கடும்தொனியில் தெரிவித்தார். மாவைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்தி வருவீர்களா என கேட்குமாறு சிவமோகன் தெரிவித்த போது இது கோல்சென்ரர்அல்ல. கட்சி. உங்கள் வைத்தியசாலை அல்ல இது.என்று சாணக்கியன் பதில் அளித்தார். அவர்மாத்திரம் அல்லாமல் ஏனைய சில உறுப்பினர்களும் கூட்டத்தை உடனே ஆரம்பிக்குமாறு கூறினர். இதனால் சிவமோகனுக்கும் அவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தை உபதலைவர் தலைமையில் உடனடியாக நடத்துங்கள் அல்லாவிடில் குழப்புவர்களை வெளியேற்ற வேண்டிவரும் என பீற்றர் இளஞ்செழியனும் தெரிவித்திருந்தார்.தனது நிலைப்பாட்டில் சிவமோகனும் விடாப்பிடியாக நின்றமையினால் நீண்டநேரமாக கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் போர்க்களமாக மாறியது. சிவமோகனுக்கு அருகில் எழுந்துசென்ற சுமந்திரன் அவரை சாமாளிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் 10.45மணியளவில் கூட்டம் இடம்பெறும் மண்டபத்திற்கு மாவை.சேனாதிராஜா வருகை தந்திருந்தார். இதன்போது உங்கள் தலைமையில் கூட்டத்தை நடத்த ஏலாது மாவைஐயா. எனவே அந்த கதிரையில் இருக்க வேண்டாம் இந்தபக்கம் இருங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவருக்கு தெரிவித்தார்.அதனை பொருட்படுத்தாத மாவை.சேனாதிராஜா முன்பகுதியில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தார். அதன்பின்னர் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement