குடும்ப வன்முறை தொடர்பில் அறிவிக்க ‘மிது பியச’ பிரிவுக்கு 24 மணி நேர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நாட்டில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மபிடிகம தெரிவித்தார்.
இதேவேளை, குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் மித்ரு பியசவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேஷானி கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆண்களும் குடும்ப வன்முறையால் பாதிப்பு. அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம். குடும்ப வன்முறை தொடர்பில் அறிவிக்க ‘மிது பியச’ பிரிவுக்கு 24 மணி நேர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.070 2 611 111 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் குடும்ப வன்முறை தொடர்பில் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும் என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.இந்நாட்டில் சுமார் 10 வீதமான ஆண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மகளிர் சுகாதார பிரிவின் திட்ட முகாமையாளர் திருமதி நெத்யாஞ்சலி மபிடிகம தெரிவித்தார்.இதேவேளை, குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதற்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் மித்ரு பியசவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேஷானி கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.