மன அழுத்தத்தைக் குறைத்து, ஊழியர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், “சிறிது இடைவேளை எடுங்கள்; மனதைத் தளர்த்தி, வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்” என்ற தொனிப்பொருளில் மனத் தளர்வு மற்றும் உளவள மேம்பாட்டு நிகழ்வொன்று இன்று புதன்கிழமை (02) அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய சுகாதார வைத்திய அலுவலக ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம். அஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலுவலக ஊழியர்களின் மனநலம், பணிச்சுமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உள ஆரோக்கியத்தைப் பேணுதல் மற்றும் பணியிடத்தில் புத்துணர்வுடன் செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதன்போது அஷ்சேஹ் ஏ. ரஃபீஸ் (மதனி), டாக்டர் ஏ.எச். நஸ்மி, தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் CC உத்தியோகத்தர் ஏ. தாஹிரா மற்றும் கிண்ணியா பிரதேச செயலக ஆலோசனை, வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எச். ரியாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு, மனத் தளர்வு மற்றும் உளவள மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்களை விளக்கினர்.
நாளாந்த பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மனநிலையுடன் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், அவர்களின் மனநலம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு பயனுள்ளதாக அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கிண்ணியா பிரதேச சுகாதார ஊழியர்களின் மன அழுத்தத்தைப் போக்க உளவள நிகழ்வு மன அழுத்தத்தைக் குறைத்து, ஊழியர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், “சிறிது இடைவேளை எடுங்கள்; மனதைத் தளர்த்தி, வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்” என்ற தொனிப்பொருளில் மனத் தளர்வு மற்றும் உளவள மேம்பாட்டு நிகழ்வொன்று இன்று புதன்கிழமை (02) அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய சுகாதார வைத்திய அலுவலக ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம். அஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலுவலக ஊழியர்களின் மனநலம், பணிச்சுமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உள ஆரோக்கியத்தைப் பேணுதல் மற்றும் பணியிடத்தில் புத்துணர்வுடன் செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இதன்போது அஷ்சேஹ் ஏ. ரஃபீஸ் (மதனி), டாக்டர் ஏ.எச். நஸ்மி, தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் CC உத்தியோகத்தர் ஏ. தாஹிரா மற்றும் கிண்ணியா பிரதேச செயலக ஆலோசனை, வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எச். ரியாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு, மனத் தளர்வு மற்றும் உளவள மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்களை விளக்கினர்.நாளாந்த பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மனநிலையுடன் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுடன், அவர்களின் மனநலம் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு பயனுள்ளதாக அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.